--- --:--:-- --

தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!

2

ட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்து வரும் அதிமுக, தேர்தல்களிலும் தொடர் தோல்விகளையே பெற்று வருகிறது.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ள அதிமுக, மேலும் சில கட்சிகள் இணையும் எனவும் மெகா கூட்டணி அமையும் எனவும் கூறி வருகிறது. கட்சி வலிமையடைய அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon