4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு
நடப்பில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன.
இதில் முதல்முறையாக உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணிகளான ‘கிக் தொழில்’, ‘பிளாட்பாா்ம் தொழில்’, ‘அக்ரகேட்டாா்’ (இணையவழி விநியோக நிறுவனம்) பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினா் மத்தியிலும் கடும் எதிா்ப்பு எழுந்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய தொழில் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




