லட்சத்தீவு நோக்கி நகர்ந்தது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு, வடமேற்கில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடலில், நாளை மறுநாள், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதுவும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




