--- --:--:-- --

வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரிகள்..!

1

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்டித்து, தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த லாரிகள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

 

நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த லாரிகள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன.

 

இந்நிலையில் டெண்டர் முறையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவித்ததால், 700 டேங்கர் லாரிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், விடுபட்ட லாரிகளையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், விடுபட்ட லாரிகளையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.

 

தென்மண்டலங்களில் 5 ஆயிரம் லாரிகள் ஓடாது என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon