முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி!
முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி (91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் தெற்கு மும்பையிலுள்ள HN ரிலையன்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




