குன்னத்தூர் விபத்தில் வடமாநில வாலிபர்கள் காயம்..!
குன்னத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், 2 வட மாநில வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அந்த இருசக்க வாகனத்தின் மீது மோதியது.
அதில் தூக்கி வீசப்பட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்கு அடியில் சிக்கிய வாகனத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





