கேஸ் வெடித்ததில் உடல் சிதறி 3 பேர் பலி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேஸ் வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெல்டிங் கடையில் இருந்த கேஸ் அதிக அழுத்தத்துடன் வெடித்ததில் 3 பேரும் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்த மேலும் 3 பேர் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தில் உடல்கள் சிதறியதால் சடலங்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




