புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப எச்சரிக்கை..!
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார். நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




