சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது!
திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூம்பாறை டாஸ்மாக் பார் அருகே 01.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய போலீசார் சோதனை செய்தபோது சுந்தரமூர்த்தி(41) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 180ML அளவுள்ள 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





