--- --:--:-- --

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

1

லங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கச்செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை ரயில் பாதை, ஈரோடு – பழனி ரயில் பாதை, அத்திப்பட்டு – புதூர் ரயில் பாதை, சென்னை – கடலூர் ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

 

சென்னையில் புறநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதுடன், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon