--- --:--:-- --

திருப்பூர் : சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் கைது

12

திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டமேடு டாஸ்மாக் பார் அருகே 22.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

வீரபாண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது பத்மநாதன்(32) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாண்டிபாளையம் டாஸ்மாக் பார் அருகே 22.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் மத்திய காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது பாஸ்கர்(56) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து
 கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி டாஸ்மாக் பார் அருகே 22.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சண்முகசுந்தரம்(35) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon