--- --:--:-- --

புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்!

5

மிழகத்தில் 2 இடங்களில் புதிய மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.

 

காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவது அடிப்படையில் இரண்டு மணல் குவாரியும் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

 

நெரூர் வடக்கு மணல் குவாரியில் இருந்து 2 ஆண்டுகளில் 3,21,000 மீட்டர் க்யூப், அச்சமாபுரம் மணல் குவாரியில் இருந்து 4,80,000 மீட்டர் க்யூப் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon