கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் செல்ல உள்ளார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
முன்னதாக திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் அவர் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நாள் உடுமலை பேருந்து நிலையம் அருகே பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கர் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பின்னர், பொள்ளாச்சி செல்லும் முதலமைச்சர், அங்கு புதிய கட்டடங்கள் மற்றும் காமராஜரின் சிலையை திறந்து வைக்கிறார். இதனையடுத்து அன்றைய தினம் மாலை கோவையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




