--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமிக்கு Good Bye சொல்ல மக்கள் தயாராகிவிட்டார்கள் – முதலமைச்சர்

1

டப்பாடி பழனிசாமிக்கு ”டாடா…Bye Bye” காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் “Good Bye” சொல்ல தயாராகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

 

பெட்ஷீட் போட்டு அன்று ஸ்டாலின் மனுக்களைப் பெற்ற நிலையில், தமிழகத்தில் ஏன் இன்னும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன என எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, அதை வொர்க்‌ஷீட்களாக மாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

 

 

தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்த எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், அமித்ஷாவின் கதவைத் தட்டியது என்ன தவறு என்று பழனிசாமி கேட்கிறார். எதற்காக தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தைக் காக்க டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி அடமானம் வைத்து விட்டீர்கள் என தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் “மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்..” சுற்றுப்பயணத்தை ’சுந்தரா டிராவல்ஸ்’ படத்தைக் குறிப்பிட்டு முதலமைச்சர் கிண்டல் செய்தார். இதனிடையே, கச்சத்தீவை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் மீட்க முடியும் எனக் கூறி, இதுவரை கச்சத்தீவை மீட்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

 

முன்னதாக, மயிலாடுதுறையில் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மேலும் 271 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை 54 ஆயிரத்து 461 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 82 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon