தொண்டி அருகே கேட்ட வரம் தரும் வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை நடைபெற்றது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் வராகி அம்மன் கோவிலில் உள்ளது. வராஹி அம்மன் கோவில் ராமநாதபுரம் உத்திரகோசமங்கையில் உள்ளது அதனை அடுத்து மாவட்டத்தில் இரண்டாவது கோவிலாக உள்ளது. வேறு எங்கும் வராஹி அம்மன் கோவில் தனியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு கேட்டவரம் தருவதாக நம்பப்படுகிறது. இக்கோவில் அம்மியில் அரைத்த மஞ்சள் பிரசாதமாக சிறுநெல்லி அளவு வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் இங்கு அதிக அளவில் வந்து வழிபட்டு செல்வதன் மூலம் தங்களுக்கு குறைகள் நிறைவேறியதாகவும் நம்பப்படுகிறது.

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராஹி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் வராகி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை ஜூலை 15ல் நடைபெற்று, பக்தர்களுக்கு கேட்ட வரம் தருவதாக நம்பப்படுகிறது.
அம்மியில் அரைத்த மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வழிபட்டு குறைகள் தீர்ந்ததாக நம்புகின்றனர். வராஹி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.





