--- --:--:-- --

பேராவூரணியில் தாய் சோட்டகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளியில் கருப்பு பட்டயம் வழங்கும் விழா.!

12

ஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தாய் சோட்டகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே மாணவர்களுக்கான கருப்பு பட்டயம் வழக்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் கராத்தே பயிற்றுனர் சீவன்குறிச்சி எம். கே.ஆத்மநாதன் தலைமை வகித்தார்.

 

பள்ளியின் பெற்றோர் சங்க தலைவர் டி.முருகையன், கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், புனல் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை ஏ. பால்ஜான்சன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

கராத்தே மாணவர்கள் மகேஷ்ராம், திருமேனிநாதன், கிரிதரன், தேவா ஆகிய மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ஷிகான் கே.பாண்டியன் செய்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon