--- --:--:-- --

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ..!

2

திருவள்ளூர் அருகே அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ஆயில் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காலை 5 மணியளவில் தீ பற்றியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

 

மேலும் இந்த தீ விபத்தால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
ரயில் பெட்டிகளின் இணைப்பை துண்டிக்காமல் விட்டதால் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீப் பரவி வருகிறது. மேலும் சுற்றி உள்ள குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அருகில் இருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

 

மேலும் வீடுகளுக்கு செல்லும் மின்சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் மீது இருந்து பொதுமக்கள் ஆயில் ஏற்றிச் சென்ற ரயில் பற்றி எரிவதை பார்த்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்காததால் அருகில் உள்ள இருளர் காலனி குடியிருப்புகளுக்கும் தீ பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon