--- --:--:-- --

பேராவூரணியில் நடந்த ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் ..!

14

ஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ரயில் பயணிகள் சங்க கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் கௌதமன் தலைமை வகித்தார், செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

தீர்மானங்கள் அகல ரயில் பாதை திட்டத்திற்கு முன்பாக இயக்கப்பட்ட காரைக்குடி – சென்னை எக்மோர் விரைவு ரயில் கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண் 20683 மற்றும் 20684 பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல திருச்சி கோட்ட மேலாளர் சென்னை தென்னக ரயில்வே மேலாளர் பரிந்துரையை டெல்லி ரயில்வே போர்டு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

 

ராமநாதபுரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் வண்டி எண் 16103 மற்றும் 16104 பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல திருச்சி கோட்ட மேலாளர் பரிந்துரை செய்து நிறைவேற்றி தர வேண்டும். பேராவூரணி ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாதாரண வண்டி எண் 06197 மற்றும் 06198 மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையும் அதே மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கும் இயக்க வேண்டும்.

 

பேராவூரணி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு மையத்தினை மீண்டும் திறந்திட வேண்டும். ரயில்வே நிலையத்தின் பகுதிகள் சுகாதாரமற்று காணப்படுகிறது அதனை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon