--- --:--:-- --

தவெக முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு..!

1

2026 இல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற நோக்கிலேயே கட்சி செயல்படும் என தவெக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.இந்த நிலையில், 2026 இல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற நோக்கிலேயே கட்சி செயல்படும் என சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஜூலை மாதத்திலிருந்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், இந்தச் சமயத்தில் 5 மண்டல மாநாடுகளும், 120 மாவட்ட மாநாடுகளும் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

 

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon