சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, கட்டிடங்களின் வகையைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண குடியிருப்பு கட்டிடங்களுக்கான அபராதம் ரூ.10,000 ஆகவும், சாதாரண வணிக கட்டிடங்களுக்கு ரூ.25,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.50,000 மற்றும் சிறப்பு வணிக கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், அடுக்குமாடி வணிக கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




