திருப்பதி பக்தர்கள் டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில பக்தர்கள் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை அருகிலுள்ள டோல்கேட் மற்றும் சுற்றுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




