திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் கேரள ராப் பாடகர் வேடன்..!
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள கேரள “ராப் இசைப் பாடகர்” வேடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திருமாவளவனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் புரட்சிகரமான பாடல் வரிகள் மூலம் கவனம் பெற்ற கேரள ராப் இசைப் பாடகர் வேடனுக்கு திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கேரள மாநிலம் கொச்சிக்கு நேரடியாக சென்று வேடனை சந்தித்து அழைப்பு விடுத்தார்.சாதி மத அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்கள் மூலம் கவனம் பெற்ற வேடனுடன் அண்மையில் வீடியோ காலில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 35 வருடங்களாக அரசியலில் தாங்கள் பேசி வரும் விஷயங்களை 2 நிமிட பாடல்களில் வேடன் சொல்லிவிடுவதாகவும், தைரியமாக இருங்கள் என்றும் பாராட்டியிருந்தார்.
மேலும், தான் அடிக்கடி கேரளா வருவேன் என திருமாவளவன் கூற வீட்டிற்கு வாருங்கள் என வேடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது வேடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





