--- --:--:-- --

திருப்பூர் : திருமணமாகிய 78 நாளில் புதுப்பெண் தற்கொலை

9

திருப்பூர் அருகே திருமணம் ஆகிய 78 நாளில் புதுப்பெண் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை உட்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்புக்கு காரணம் கணவர், மாமனார், மாமியார் என ஆடியோவை தனது தந்தைக்கு அனுப்பிவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா என்பவருக்கு என்பவருக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் என்பவரின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து நடந்துள்ளது.

 

இந்த நிலையில் திருமணம் செய்து வைக்க சில நாட்களில் ரிதன்யாவை அவரது கணவர் மாமனார், மாமியார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், தினமும் சித்திரவதைகளை செய்து வந்ததாகவும் மாமனார் மாமியார் இருவரும் மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது எனவும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தனது இந்த தற்கொலைக்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூன்று பேர் தான் காரணம் என தனது தந்தைக்கு வாய்ஸ் மூலம் ஆடியோ அனுப்பிவிட்டு வைத்து தனது காரில் முண்டிப்பாளையம் பகுதியில் காரை நிறுத்தி தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை உட்கொண்டு காரில் உயிரிழந்துள்ளார்.

 

இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்ட போலீசார் அவினாசி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். திருமணமாகி 78 நாட்களில் புது பெண் ரிதன்யாவின் உறவினர்கள் உயிரிழப்புக்கு காரணமான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய மூன்று பேரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சித்ரா தேவியின் கணவர், மாமனார் ஈஸ்வரன் மூர்த்தி கட்சி பின்புலத்தோடு இருப்பதால் பொதுமக்கள் போலீசார் கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் தற்பொழுது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பே தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon