தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்- டி.டி.வி தினகரன்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார்.
அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்.
கொள்கை வேறாக இருந்தாலும் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். உறுதியாக கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான் என நான் நம்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து திமுக கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




