--- --:--:-- --

மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாள்..!

3

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 25-ம் தேதி புதன்கிழமை முடிவடையவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் தகவல்படி, இதுவரையில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் வருகிற 25-ம் தேதி என்பதால், அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் குறைவு என கூறப்படுகிறது.

இதனால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் திருத்தங்களுக்கான அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்து, இன்றே தங்கள் விண்ணப்பப் பதிவை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon