மதுராந்தகம் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத உருவத்தை உருவாக்கி, பீமன் தன் கையில் வைத்துள்ள கதாயுதத்தால் துரியோதனை தாக்குவது போலவும், அப்போது துரியோதனின் முட்டியில் இருந்து வரும் ரத்தத்தை திரௌபதி கூந்தலில் தடவிக்கொள்வது போலவும் தத்ரூபமாக நடித்து அசத்தினர். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




