சசிகலா புஷ்பா மீது மோசடி புகார்..!

தூத்துக்குடியில் ₹2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

தனது நிலத்தை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக தாமஸ் கிங்ஸ்டன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் உறுதியானால், சிறை உறுதி என சொல்லப்படுகிறது.