எழும்பூருக்கு பதிலாக இன்று முதல் தாம்பரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்..!
சென்னை எழும்பூர் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளால், 5 விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் நிலையில், புறநகர் ரயில் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குருவாயூர், திருச்செந்தூர், மன்னார்குடி, தேஜஸ், கொல்லம் ஆகிய 5 விரைவு ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.இதனால், தாம்பரம்-கடற்கரை இடையிலான 6 புறநகர் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை தாம்பரம்-கடற்கரை இடையே ஞாயிறுதோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதாவது, ஞாயிறுத்தோறும் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 4.10 மணிக்கு கடற்கரைக்கு சென்றடையும்.அதே போன்று கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 5:20 மணிக்கு தாம்பரத்தை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில்களின் நேர மாற்றத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




