சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்..!
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி இணையும் படத்தில் முக்கிய இயக்குநர் ஒருவரும் நடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், ‘தக் லைஃப்’ படத்தின் மாபெரும் தோல்வியால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.அதற்கு பதிலாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி மூன்று முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்றும் உடனடியாக படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டது.
மேலும் முழுக்க வடசென்னையை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்றும் வடசென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால் சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், ப்ரோமோ ஷூட் ஒன்றை வெற்றிமாறன் எடுத்துள்ளார்.
ப்ரோமோ ஷூட் சிம்பு பங்கேற்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் இன்னொரு சர்ப்ரைஸாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இடம்பெற்றிருக்கிறார்.சிம்பு உடன் நெல்சனும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் தான் சிம்பு – நெல்சனை வைத்து ப்ரோமோ ஷூட் நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் நெல்சன் நடிகராக அறிமுகமாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக தற்காப்பு கலைகளை கற்றுவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




