--- --:--:-- --

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ..!

1

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் சிலர், பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது.

 

242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 ஏ என்ற இருக்கையில் இருந்த விஷ்வாஷ் குமார் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட மற்ற அனைத்து விமான பயணிகளும் உயிரிழந்தனர்.

 

அதேநேரம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்த 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 11 பேர் உடல்நலம் அடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, விடுதி வளாகத்திற்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குடியிருப்பில், மருத்துவர்களின் உறவினர்கள் 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த போது, விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் சிலர், பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் உதவி கேட்ட காட்சிகளும், அனைவரையும் காப்பாற்ற உள்ளூர் மக்கள் கூச்சலிட்ட காட்சிகளும் உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon