--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை..! விடுபட்டவர்களுக்கு எப்போது?

3

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் தற்போதுள்ள 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகளில், இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடி 14 லட்சம் குடும்பத் தலைவிகள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர்.

 

எனவே மீதம் உள்ள தகுதியான குடும்ப அட்டைகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜூன் முதல் வாரம் முதல் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பம் இதுவரை தொடங்காமல் இருந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டம் குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

 

சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் நிகழ்ச்சியில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் விண்ணப்பம் குறித்து முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்ததாகவும், அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon