இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது.நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் தேர்வை எழுதினர்.
இந்த நிலையில், இந்த நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்கள் முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




