--- --:--:-- --

தமிழகத்தில் 9 இடங்களில் வாட்டி எடுத்த வெயில்..!

3

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் சதம் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, அதிராமபட்டினம் உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்ததால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிந்தாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

 

அந்த வகையில், தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடத்திலும் வெயில் சதம் அடித்தது. அதன்படி அதிகப்பட்சமாக தூத்துக்குடியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. இதேபோல், மதுரை நகரத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி, நாகை, நெல்லை பாளையங்கோட்டை, அதிராம்பட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

 

மேலும், புதுச்சேரியிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் வாட்டி வதைத்தது.ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் வரும் 15-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் நீட்சியாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூரில் நாளை கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று, கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரியிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரியில் நாளை மறுதினமும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon