பாமகவை போட்டியாக நினைக்கவில்லை : திருமாவளவன்
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே நடப்பது உட்கட்சி மோதல் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவின் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
பாமகவை நாங்கள் போட்டியாக ஒருபோதும் நினைத்தது இல்லை; எங்கள் களமும் பயணமும் வேறு என்றார். திமுக அணியில் பாமக வருமா என்ற கேள்விக்கு யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு இப்போது அவசியம் இல்லை என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




