--- --:--:-- --

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்..!

1

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த இளம்பெண், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பெற்றோர் பணிக்கு சென்றிருந்த வேளையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

இந்நிலையில், அவரை ஒருதலையாக காதலித்து வந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். விரைந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்த நிலையில், மாணவியை கொலை செய்த நபர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் மாணவியை கொலை செய்த வழக்கில் பிரவீன்குமார் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.மாணவி அஸ்விதாவை பிரவீன்குமார் காதலித்து வந்ததாகவும் அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon