--- --:--:-- --

யுபிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்..!

3

யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த அஜய் குமாரை நியமித்து மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமாரை நியமித்ததற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

 

1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த இவர், கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.இதையடுத்து இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த இவர், கேரள மாநிலத்தில் ஐடி, கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு செயலாளராக இருந்துள்ளார்.

 

இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளராக பணியாற்றினார்.மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்தார். இந்த நிலையில் தான் யுபிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon