பொள்ளாச்சி வழக்கை போல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வரும் – முதல்வர்
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என கூறியது நடந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்தற்கு தானே காரணம் என ஈபிஎஸ் பொய் சொல்லி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.
வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம் மற்றும் ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர். இந்த 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றக் கண்காணிப்பில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், சதீஷ், ஹெரன்பால் ஆகியோருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பாபு, அருளானந்தம், அருண் குமார் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் கொடநாடு கொலைக் கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும் என்றும். எடப்பாடி பழனிச்சாமி அம்ஷாவை சந்தித்தார் அது ஏன் என்று உங்களுக்கே தெரியும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்தையும் தான் கொண்டு வந்தேன் என்று எடப்பாடி பனிசாமி கூறி பொய் பித்தலாட்டம் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




