--- --:--:-- --

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார்..!

1

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமப்பட்டு வந்த குமரி ஆனந்தன், சென்னை வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

பல் துறை மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். அதன் பிறகு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரி ஆனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி ஆனந்தன் நேற்றிரவு காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உறுதி செய்தார்.

 

இதனையடுத்து, மறைந்த குமரி ஆனந்தன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

 

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது. தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அதில் அவர் “தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை.. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக . பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon