சட்டப்பேரவையில் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ல் மார்க்ஸின் உருவச் சிலை சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்றும், பி.கே மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர் மூக்கையாத் தேவர் என்றும் அவருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




