ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!

ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இது பற்றி பேசிய, போக்குவரத்து அமைச்சர் தீபக், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

 

தெலங்கானா, பீஹாரை போல், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் சர்வே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.