அம்பையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டம், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பறவைகளை ஆர்வமுடன் கணக்கெடுத்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




