--- --:--:-- --

ஹிந்தியில் கவிதை சொல்லத் தெரியாததால் மாணவனை அரை நிர்வாணமாக நிற்க வைத்த ஆசிரியை..!

10

ஹிந்தி கவிதையை சரியாக சொல்லத் தெரியாத காரணத்தினால் சென்னையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஹிந்தி ஆசிரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த விவாதம் மிக தீவிரமாக நடந்து வருகிறது.

 

இந்த சூழலில் இந்தி கவிதை சரியாக வாசிக்கவில்லை எனக் கூறி சிறுவனை ஆசிரியை தாக்கிய அதிர்ச்சிகர சம்பவம் சென்னை கீழ்பாக்கத்தில் நடந்துள்ளது. கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இந்திய ஆசிரியராக இருந்த பத்மலட்சுமி மூன்றாம் வகுப்பு மாணவன் சரியாக இந்தி வாசிக்கவில்லை எனக்கூறி ஆத்திரத்தில் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

 

அத்துடன் சிறுவன் அணிந்திருந்த சட்டகையும் கழற்றி அரை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளார். அவமானத்தால் குறுகிய சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

 

விசாரித்த பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்குவது தொடர்பாக பள்ளி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon