போக்குவரத்து பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த நபர்கள்..!
சென்னை அடுத்த ஆவடியில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பெண் காவலரோடு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1,000 எதிர்த்து பேசியதற்கு ரூ.2,000 அபராதம் விதித்துள்ளார்.
அவரது நீதிமன்றத்தில் செலுத்துவதாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மதியழகன் என்பவர் தனது நண்பரோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இருவரின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து காவலர்கள் அபராதம் பிடித்தனர்.
இந்த தொகையை தாம் நீதிமன்றத்தில் செலுத்திக் கொள்வதாக மதியழகன் கூறியதற்குப் பெண் காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெண் காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரது செல்போனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்த காவலர் தன்னை எதிர்த்து பேசியதற்காக கூடுதலாக 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




