இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வலியுறுத்தி SSUN அமைப்பு கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது. ஷிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் (SSUN) என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பு, RSS இன் துணை அமைப்பாகும்.
நாடு முழுவதும் ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்று அதனை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே பாரத் என்ற பெயரைத்தான் பாஜக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




