கல்யாண வீட்டு சாப்பாடு..மயங்கி விழுந்த 40 பேர்..!
உத்திரபிரதேசத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் வராதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜ் பால் சிங் மகன் விபின் குமாரின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 40 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





