--- --:--:-- --

கேஎஃப்சி சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி..!

6

சென்னை திருவொற்றியூரில் kfc சிக்கனில் முடி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை திருவொற்றியூரில் தாம்பரம் பகுதியில் கேஎஃப்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரீத் என்பவர் தனது மகனுடன் சாப்பிட சென்றுள்ளார்.

 

அப்பொழுது அவர் சாப்பிட்ட சிக்கனில் முடி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேஎஃப்சி ஊழியர்களிடம் தெரிவித்த பொழுது அவர்கள் உரிய பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பிரீத் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon