குறுக்கே பாய்ந்த காட்டெருமை.. இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்து விபத்து..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் குறுக்கே வந்த காட்டெருமைகளின் மீது இருசக்கர வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து ஓடியது.
இதனை எதிர்பாராமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் காட்டெருமையின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காட்டெருமைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





