சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு அருகே, அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே துறைக்காக சிஎம்டிஏ சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்ட போதும், ரயில்வே சார்பில் நடைபெறும் பணிகள் தாமதமடைவதால் இன்னும் 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.