நாட்டு வெடி வெடித்து ஆறு வயது சிறுமி உயிரிழப்பு!

ருமபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி கிராமத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் வெடித்த விபத்தில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அபி-நாகவேணி தம்பதியின் ஆறு வயது மகள் கவிநிலா, விடுமுறையை ஒட்டி பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.

 

அப்போது வீட்டின் மாடியில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் எடுத்து விளையாடிய போது மொத்தமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் மேற்கூரை இடிந்ததோடு பலத்தை காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.