--- --:--:-- --

சீமான் எதனை ஆதாரமாக வைத்துப் பேசுகிறார்?

1

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

அப்போது, அவர், “பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி எனும் கேள்வி கேட்க வேண்டியது இருக்கிறது” என்று கூறிவிட்டு, பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூகநீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 

இது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். அவர் தெரிவித்ததாவது, “பெரியார் குறித்து விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் நாம் அதற்கு விளக்கம் கொடுக்கலாம்.

 

ஆனால், இன்று சீமான் எடுத்தது வாந்தி, விமர்சனமே கிடையாது. பெரியார் சொன்னதை மாற்றிச் சொன்னால் அதற்கு உண்மைப் பொருளென நாம் விளக்கம் கொடுக்க முடியும். ஆனால், இன்று சீமான் சொன்னது முழுவதும் பொய்.தன் வாழ்நாளில் பெரியார் எந்த இடத்திலும் சொல்லாத விஷயத்தை இன்று சீமான் போகிற போக்கில் சொல்லியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon